/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிரம்பி வழியும் செப்டிக் டேங்க் கழிவு நீர்; சூலுார் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அவதி

ADDED : ஆக 18, 2025 11:20 PM

சூலுார்; சூலுார் புது பஸ் ஸ்டாண்டில், கழிவறை செப்டிக் டேங்க் நிரம்பி, கழிவு நீர் வெளியேறி வருவதால், கடும் துர்நாற்றத்தால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சூலுார் - திருச்சி ரோட்டில் புது பஸ் ஸ்டாண்ட் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து செல்கின்றனர்.
பஸ் ஸ்டாண்ட் வளாகத்துக்குள் கட்டண கழிப்பிடமும், இலவச கழிப்பிடமும் உள்ளன. இதில், கட்டண கழிப்பிடத்தின் செப்டிக் டேங்க் நிரம்பி, ஒரு வாரமாக கழிவு நீர் வெளியேறி பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் தேங்கி, துர்நாற்றம் வீசுவதால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். கழிவு நீரை வெளியேற்ற பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ''பல ஆயிரம் பேர் வந்து செல்லும் பஸ் ஸ்டாண்டில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. கடும் துர்நாற்றம் வீசுவதால், அங்கு நிற்க கூட முடியவில்லை. டேங்க் மூடி திறந்து கிடக்கிறது. நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. கழிப்பிடத்தை பூட்டியுள்ளதால், பலரும் பொதுகழிப்பிடத்துக்கு செல்ல வேண்டி உள்ளது. அதுவும் சுத்தமாக இல்லை. பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்,'' என்றார்.