தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளிகளில் ஓசோன் விழிப்புணர்வு

பள்ளிகளில் ஓசோன் விழிப்புணர்வு

பள்ளிகளில் ஓசோன் விழிப்புணர்வு


ADDED : செப் 18, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு, மாவட்ட அரசு பள்ளிகளில் தொடர்ந்து  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளி வளாகங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர். ஓசோன் படலத்தின் முக்கியத்துவம், அதன் பாதுகாப்பின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மரங்களின் பங்கு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ந்து, ‘ஒரு மரம் – பல தலைமுறைகளுக்கான பாதுகாப்பு; ஓசோனைப் பாதுகாப்போம்; பூமியைக் காப்போம்’ என்ற உறுதிமொழியை மாணவர்களும் ஆசிரியர்களும் ஏற்றனர்.

ஓசோன் பாதுகாப்பு குறித்து கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்கள் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us