ADDED : அக் 21, 2026 05:41 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு காய்கறி மார்க்கெட்டில் இன்று வாழைத்தார் வரத்து மற்றும் விலை குறைந்ததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.
கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் இன்று செவ்வாழை கிலோ – 55, நேந்திரன் -–- 50, பூவன் -–- 45, கதளி -–- 55 மற்றும் சாம்பிராணி வகை வாழைத்தார் -–- 45 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
கடந்த வாரத்தை காட்டிலும், நேற்று செவ்வாழை கிலோ – 25 மற்றும் சாம்பிராணி வகை வாழைத்தார் -–- 3 ரூபாய் விலை குறைந்து காணப்பட்டது. இதே போன்று பூவன் கிலோவுக்கு, 5 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், ‘மார்க்கெட்டில் நேற்று, செவ்வாழை, நேந்திரன் வாழைத்தார் வரத்து குறைந்த அளவில் இருந்தது. ரஸ்தாளி வகை வாழைத்தார் வரத்து இல்லை. நவராத்திரி, ஆயுத பூஜை விழா முடிந்ததால் விலை சரிந்துள்ளது. வரும் நாட்களில் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது,’ என்றனர்.
