ADDED : அக் 24, 2026 06:38 PM
அ நிறம் | அளவு
கோவை: திருப்பூர் அருகே ரயில்வே பாலத்தில் பராமரிப்பு பணிகள் இன்று நடக்கின்றன. இதனால், திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு பாலக்காடு டவுன் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் ஊத்துக்குளி ஸ்டேஷன் அருகே நிறுத்தி வைக்கப்படும்.
பணிகள் முடிந்தபின் முன்பதிவில்லா சிறப்பு ரயிலாக இருகூர், போத்தனுார் வழியாக பாலக்காடு டவுனிற்கு இயக்கப்படும். சிங்காநல்லுார், பீளமேடு, வடகோவை, கோவை வழியாக இயக்கப்படாது என, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
