/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவன பொதுக்குழு கூட்டம்
/
பாலமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவன பொதுக்குழு கூட்டம்
பாலமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவன பொதுக்குழு கூட்டம்
பாலமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவன பொதுக்குழு கூட்டம்
ADDED : ஆக 20, 2025 09:59 PM
பெ.நா.பாளையம்; பாலமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் ஐந்தாவது பொது குழு கூட்டம் நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே தெக்குப்பாளையத்தில் உழவர் தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு வளாகத்தில் கூட்டம் நடந்தது.
நிகழ்ச்சியில், நிறுவனத்தின் உறுப்பினர்களில், 12 சதவீதம் பேர் மட்டுமே வியாபாரம் செய்ததில் கடந்த ஆண்டு ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் ஆண்டு வணிகமாக நடந்து உள்ளது. இதை தொடர்ந்து அதிகப்படுத்த, இந்நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ள அனைவரும் பாலமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் வணிகம் மேற்கொள்ள முன்வர வேண்டும். இந்நிறுவனத்தில் அதிகப்படியாக வணிகம் செய்த நபர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டது. வரும் ஆண்டில் வணிக இலக்கு, 6 கோடி ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டது. இளைஞர்கள் இந்நிறுவனத்தில் பணியாற்ற முன்வர வேண்டும் என, நிர்வாகிகள், வேளாண் துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.
கூட்டத்தில், பாலமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் சித்ரா சம்பத், வேளாண் இணை இயக்குனர் மீனாம்பிகை, செயலாளர் ராயப்பன், இயக்குனர்கள் விஜயகுமார், செல்வராஜ், ரங்கநாதன், மகாலட்சுமி, பிரபு, நரசிம்மராஜ் உள்ளிட்ட பல விவசாயிகள் கலந்து கொண்டனர்.