/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயிகளுக்கு பனை விதைகள்; தோட்டக்கலைத்துறை அழைப்பு
/
விவசாயிகளுக்கு பனை விதைகள்; தோட்டக்கலைத்துறை அழைப்பு
விவசாயிகளுக்கு பனை விதைகள்; தோட்டக்கலைத்துறை அழைப்பு
விவசாயிகளுக்கு பனை விதைகள்; தோட்டக்கலைத்துறை அழைப்பு
ADDED : செப் 19, 2024 06:37 AM
சூலுார் : சுல்தான்பேட்டை வட்டாரத்தில் விவசாயிகளுக்கு, இலவசமாக பனை விதைகள் வழங்கப்பட உள்ளது, என, தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
சுல்தான்பேட்டை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ரமேஷ் கூறியதாவது:
சுல்தான்பேட்டை வட்டார தோட்டக்கலைத்துறை மற்றும் பனை மேம்பாட்டு இயக்கம் சார்பில், பனை விதைகள் விவசாயிகளுக்கு இலவசமாக வினியோகம் செய்யப்பட உள்ளது. ஒரு விவசாயிக்கு, அதிகபட்சமாக, 50 பனை விதைகள் வழங்கப்படும். மொத்தம், 2 ஆயிரத்து, 500 பனை விதைகள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பனை விதைகள் தேவைப்படுவோர், சுல்தான்பேட்டை வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை வேலை நாட்களில் அணுகலாம். ஆதார் அட்டை நகல், புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.