/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிதி நெருக்க டியில் சிக்கி தவிக்கும் ஊராட்சிகள்; அடிப்படை வசதிகள் நிறைவேற்ற திண்டாட்டம்
/
நிதி நெருக்க டியில் சிக்கி தவிக்கும் ஊராட்சிகள்; அடிப்படை வசதிகள் நிறைவேற்ற திண்டாட்டம்
நிதி நெருக்க டியில் சிக்கி தவிக்கும் ஊராட்சிகள்; அடிப்படை வசதிகள் நிறைவேற்ற திண்டாட்டம்
நிதி நெருக்க டியில் சிக்கி தவிக்கும் ஊராட்சிகள்; அடிப்படை வசதிகள் நிறைவேற்ற திண்டாட்டம்
ADDED : ஜூலை 16, 2025 10:31 PM
பெ.நா.பாளையம்; ஊராட்சிகளுக்கான மாநில நிதி குழு மானியம் உள்ளிட்ட அனைத்து வருவாய் இனங்களைஅரசு அதிகரித்து வழங்க வேண்டும் என, ஊராட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஒவ்வொரு ஊராட்சியிலும், குறிப்பிட்ட ஊராட்சியில் உள்ள மக்கள் தொகையின் அளவுக்கு ஏற்ப, மாநில நிதி குழு மானியத்தை, மாதந்தோறும் தமிழக அரசு வழங்கி வருகிறது.
இந்த தொகையில் இருந்து ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிதியின் அடிப்படையில் குடிநீர் மோட்டார், பைப் லைன் பழுது பார்த்தல், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மழை, காற்று மற்றும் கடும் வெயில் காலங்களில் மின் மோட்டார் பழுது ஏற்பட்டால், அதை சரி செய்ய இந்த நிதி உதவுகிறது. இதுதவிர, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கான ஈமக் கிரியை நிதி தலா, 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதும், ஊராட்சியில், பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு இந்த நிதியில் இருந்து தான் சம்பளம் வழங்கப்படுகிறது.
இந்த நிதியின் வாயிலாக, தமிழகத்தில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் சுமார், 1 லட்ச ரூபாயிலிருந்து, 10 லட்சம் ரூபாய் வரை மாதந்தோறும் வழங்கப்படுகிறது.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில்,' கிராம ஊராட்சிகளுக்கு மாநிலத்தின் சொந்த வரியில், 10 சதவீதம், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியமாக வழங்கப்படுகிறது.
கிராம ஊராட்சியை பொறுத்த அளவில் தெருவிளக்குகளுக்கான மின் கட்டணம் மற்றும் குடிநீர் வழங்குவதற்கான மின் கட்டணம் ஆகியவற்றை செலுத்த குறைந்தபட்ச மானியம் வழங்கப்படுகிறது. இது தவிர, பற்றாக்குறை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தொகுப்பு நிதி வழங்கப்படுகிறது.
மேலும், மத்திய நிதி ஆணையம் வாயிலாகவும், நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஒருங்கிணைந்த, ஒப்படைக்கப்பட்ட வருவாய் வாயிலாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்முத்திரைத்தாள் வரியிலிருந்து பெறப்படும் வருவாய், மாநில அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு, கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது.
தற்போது செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாநில நிதி குழு மானியம் உள்ளிட்ட அனைத்து நிதி வருவாய், மானிய நிதியை தமிழக அரசு அதிகரித்து வழங்க வேண்டும்' என்றனர்.