/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதர் சூழ்ந்த குடியிருப்பில் பதுங்கும் சிறுத்தையால் பீதி
/
புதர் சூழ்ந்த குடியிருப்பில் பதுங்கும் சிறுத்தையால் பீதி
புதர் சூழ்ந்த குடியிருப்பில் பதுங்கும் சிறுத்தையால் பீதி
புதர் சூழ்ந்த குடியிருப்பில் பதுங்கும் சிறுத்தையால் பீதி
ADDED : செப் 19, 2024 09:55 PM

வால்பாறை : வால்பாறையில், புதர் சூழ்ந்துள்ள பொதுப்பணித்துறை குடியிருப்பு பகுதியில், சிறுத்தை பதுங்குவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வால்பாறை நகரின் நுழைவுவாயிலில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான, 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்பை சுற்றிலும் புதர் சூழ்ந்து காட்சியளிக்கிறது.
இதனால் குடியிருப்பு பகுதியில், சிறுத்தை, கரடி, யானை, பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி வந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இரவு நேரத்தில், புதரில் சிறுத்தை பதுங்குகிறது. இதனால், இங்கு வசிக்கும் மக்களுக்கு போதிய பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.
பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'குடியிருப்புக்களில் பராமரிப்பு பணி செய்து வருகிறோம். குடியிருப்பை சுற்றியுள்ள புதரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.