ADDED : நவ 22, 2026 07:58 PM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பங்கஜா மில் ரோட்டில் கடந்த ஆண்டு மாநகராட்சி பாதாள சாக்கடை பணி செய்தது.
ரோட்டை சரியாக சீரமைக்கவில்லை. அவ்வப்போது ரோட்டில் பள்ளம் ஏற்படுகிறது. நேற்று (நவ.,21) அந்த ரோட்டில் மீண்டும் பள்ளம் உருவானது. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பேரிகார்டு மட்டும் வைத்துள்ளனர். அருகிலேயே குடிநீர் குழாயும் உடைந்து, ரோட்டில் நீர் கசிகிறது. மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக சரி செய்ய மக்கள் கோரிக்கை வைத்தனர்.
