sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 திருமூர்த்தி அணையிலிருந்து பி.ஏ.பி., பாசன நீர் திறப்பு: குழப்பம் தவிர்க்க எதிர்பார்ப்பு 

/

 திருமூர்த்தி அணையிலிருந்து பி.ஏ.பி., பாசன நீர் திறப்பு: குழப்பம் தவிர்க்க எதிர்பார்ப்பு 

 திருமூர்த்தி அணையிலிருந்து பி.ஏ.பி., பாசன நீர் திறப்பு: குழப்பம் தவிர்க்க எதிர்பார்ப்பு 

 திருமூர்த்தி அணையிலிருந்து பி.ஏ.பி., பாசன நீர் திறப்பு: குழப்பம் தவிர்க்க எதிர்பார்ப்பு 


ADDED : ஜன 29, 2026 04:58 PM

Google News

ADDED : ஜன 29, 2026 04:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசனத்துக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து மீண்டும் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது; நீர் நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படாமல் இருக்க, அரசு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பி.ஏ.பி., பாசன திட்டம், முதலாம் மண்டல பாசனத்தில், திருப்பூர், கோவை மாவட்டத்துக்குட்பட்ட, 94 ஆயிரத்து 521 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த மண்டல பாசனத்துக்கு, கடந்த 24ல் திருமூர்த்தி அணையில் இருந்து பிரதான கால்வாய் வழியாக, தண்ணீர் திறக்கப்பட்டது. இக்கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்பு பணிகள் நிறைவு பெறும் முன்பே, அரசு உத்தரவுக்காக, திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்து, 10 நிமிடத்தில் மீண்டும் தண்ணீர் நிறுத்தப்பட்டது.

இதனால், ஆயக்கட்டு விவசாயிகள் அதிருப்தியடைந்தனர். இந்நிலையில், பிரதான கால்வாயில் பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றதாக தெரிவித்துள்ள பொதுப்பணித்துறையினர், நேற்று காலை திருமூர்த்தி அணையிலிருந்து மீண்டும் முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறந்தனர்.

கடந்த 24ல், திட்டமிடல் இல்லாமல் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் உடனடியாக நிறுத்தப்பட்டது. இத்தகைய குழப்பங்களை பொதுப்பணித்துறையினர் மீண்டும் ஏற்படுத்தாமல் இருக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இரு மாவட்ட விவசாயிகளும் வலியுறுத்தியுள்ளனர்.

வரும் ஜூன் 8 வரை, 135 நாட்களில், உரிய இடைவெளி விட்டு, ஐந்து சுற்றுக்களில், 10 ஆயிரத்து, 250 மில்லியன் கன அடி நீர் இந்த மண்டல பாசனத்துக்கு வழங்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us