/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பரளிக்காடு சூழல் சுற்றுலா அக்.1,2, மற்றும் 20ல் இயங்கும்
/
பரளிக்காடு சூழல் சுற்றுலா அக்.1,2, மற்றும் 20ல் இயங்கும்
பரளிக்காடு சூழல் சுற்றுலா அக்.1,2, மற்றும் 20ல் இயங்கும்
பரளிக்காடு சூழல் சுற்றுலா அக்.1,2, மற்றும் 20ல் இயங்கும்
ADDED : செப் 29, 2025 12:11 AM
மேட்டுப்பாளையம்; ஆயுத பூஜை விடுமுறை நாட்களை குறிவைத்து, பரளிக்காடு சூழல் சுற்றுலாவுக்கு, சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக, அன்றைய தினங்களில் சூழல் சுற்றுலா விடுமுறை இன்றி இயங்கும் என காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட பரளிக்காட்டில், காரமடை வனத்துறை சார்பில் பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், பழங்குடியின மக்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது .
இயற்கை எழில் மிகுந்த பரளிக்காடுக்கு வர விரும்பும் சுற்றுலாபயணிகள் https://Coimbatorewilderness.com/ என்ற இணையத ளத்தில் புக் செய்து கட்டணம் செலுத்தி, முன்பதிவு செய்து தான் வரமுடியும். மேலும், சனி மற்று ஞாயிறு மட்டுமே இங்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி உள்ளிட்ட அரசு விடுமுறை நாட்களில் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதுகுறித்து, காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், ''அக்.1சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, அக்.2 காந்தி ஜெயந்தி, அக்.20 தீபாவளி உள்ளிட்ட விடுமுறை தினங்களில் பரளிக்காடு சூழல் சுற்றுலா இயங்கும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம் போல் இயங்கும்,'' என்றார்.----