ADDED : செப் 08, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே தனியார் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோரால் பரபரப்பு ஏற்பட்டது.
துடியலூர் அருகே பன்னிமடையில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் வகுப்பறையின் கட்டுமான பணி, முழுமையாக நிறைவடையாத நிலையில், மாணவர்கள் அதில் அமர வைக்கப்பட்டு உள்ளனர் என புகார் எழுந்தது. இதையடுத்து பெற்றோர், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே வகுப்பறை கட்டடத்தை பயன்பாட்டில் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டனர். பின்னர் பள்ளி நிர்வாகத்தினர், கட்டுமான பணியை, 10 நாட்களுக்குள் முடித்து அதன் பின்னர் மாணவர்களை புதிய வகுப்பறையில் அமர வைப்போம் என உறுதி அளித்த பின்னர், பெற்றோர் கலைந்து சென்றனர்.
