/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'உடற்பயிற்சியை சிறுவயது முதலே பெற்றோர் பழக்கப்படுத்த வேண்டும்'
/
'உடற்பயிற்சியை சிறுவயது முதலே பெற்றோர் பழக்கப்படுத்த வேண்டும்'
'உடற்பயிற்சியை சிறுவயது முதலே பெற்றோர் பழக்கப்படுத்த வேண்டும்'
'உடற்பயிற்சியை சிறுவயது முதலே பெற்றோர் பழக்கப்படுத்த வேண்டும்'
ADDED : நவ 09, 2025 12:33 AM

''சு றுசுறுப்பாகவும், புத்துணர்வுடனும் இருக்க உடற்பயிற்சி அவசியம்,'' என்கிறார் கோவை அரசு கலைக்கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் விஜயகுமார்.
அவர் கூறியதாவது:
1998ம் ஆண்டு தேசிய தடகள போட்டியில், நீளம் தாண்டும் போட்டியில் பங்கேற்றேன். அன்று முதல் இன்று வரை, மாணவர்களுடன் உடற்பயிற்சி செய்து வருகிறேன். அதில் மனதிருப்தி உள்ளது. உடற்பயிற்சி என்பது அவசியம். உட்கொண்ட உணவை ஆற்றலாக மாற்றுவதற்கு மட்டுமின்றி, நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்வுடனும் இருக்க அவசியம்.
உடற்பயிற்சி செய்வதால், ரத்த ஓட்டம் சீராக இருக்கும். சிறுவயது முதல் உடற்பயிற்சி குறித்து, பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு கற்றுத்தர வேண்டும்.
இன்று பல நோய்கள் தாக்குகின்றன. அவற்றில் இருந்து பாதுகாக்க உடற்பயிற்சி தேவை. பெற்றோரும் குழந்தைகளுடன் இணைந்து, உடற்பயிற்சி செய்ய வேண்டும். தினமும், 45 நிமிடம் உடற்பயிற்சி செய்கிறேன். அதற்கு முன், ஆயத்த பயிற்சிகளையும் செய்கிறேன்.
இன்று குழந்தைகள் கீரை உள்ளிட்ட உணவை தவிர்த்து விடுவதால், அவர்களுக்கு தேவையான நார்ச்சத்து கிடைப்பதில்லை. சரிவிகித உணவும், மிதமான உடற்பயிற்சியும் அவசியம்.

