/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பார்க்கிங்' அமைக்கும் பணிகள் துவங்கியது
/
'பார்க்கிங்' அமைக்கும் பணிகள் துவங்கியது
ADDED : நவ 04, 2025 09:04 PM

வால்பாறை: வால்பாறையில், கார் பார்க்கிங் வசதியுடன் கூடிய ஸ்டேடியம் அமைக்கும் பணி துவங்கியது.
வால்பாறை அண்ணாதிடலில் பொதுநிதியின் கீழ், ஒரு கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கார் பார்க்கிங் வசதியுடன் கூடிய ஸ்டேடியம் கட்டும் பணிக்கான பூமி பூஜை கடந்த மாதம் நடந்தது.
சுற்றுலா பயணியரின் நீண்ட கால கார் பார்க்கிங் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நிதி ஒதுக்கப்பட்டதால், உள்ளூர் வாகன ஓட்டுநர்களும், சுற்றுலா பயணியரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதனிடையே அரசு அறிவித்துள்ளபடி பார்க்கிங் வசதியுடன், ஸ்டேடியம் அமைக்கும் பணிக்கான பணியை துாய்மை பணியாளர் நலவாரிய தலைவர் ஆறுச்சாமி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க., நகர செயலாளர் சுதாகர், நகராட்சி பொறியாளர் ஆறுமுகம், கவுன்சிலர் ரவிசந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

