/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆழியாறுக்கு ஆரத்தி விழா குருமகா சந்நிதானங்கள் பங்கேற்பு
/
ஆழியாறுக்கு ஆரத்தி விழா குருமகா சந்நிதானங்கள் பங்கேற்பு
ஆழியாறுக்கு ஆரத்தி விழா குருமகா சந்நிதானங்கள் பங்கேற்பு
ஆழியாறுக்கு ஆரத்தி விழா குருமகா சந்நிதானங்கள் பங்கேற்பு
ADDED : செப் 28, 2024 02:10 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, ஆனைமலையில் ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவித்து ஆரத்தி பெருவிழா நேற்று நடந்தது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி பெருவிழா நேற்று நடந்தது. விழாவுக்கு முன்னதாக, ஆனைமலை திரவுபதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
கோவிலில் இருந்து, தமிழகத்தின் குருமஹா சன்னிதானங்கள், ஆதீன கர்த்தாக்கள், துறவியர், ஆன்மிக பெரியோர் ஊர்வலமாக ஆழியாறு ஆற்றங்கரைக்கு வந்தனர்.
அங்கு, வாழ்வாதாரம், சுகாதாரம், பெருமை, கவுரவமாக விளங்கும் ஆழியாறு தாய்க்கு நன்றி தெரிவித்து, ஆரத்தி எடுத்தனர். தொடர்ந்து, ஆசி வழங்கினர்.
தமிழ்நாடு அரசு, ஹிந்து சமய அறநிலையத்துறை உயர்நிலைக்குழு உறுப்பினர் பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை நான்காவது குருமகா சன்னிதானங்கள் சிரவை ஆதீனம் கவுமாரமடம் ராமானந்த குமர குருபர சுவாமிகள்.
ஆனைமலை ஆர்ஷய வித்யா பீடம் பூஜ்யஸ்ரீ ததேவானந்த சரஸ்வதி சுவாமிகள், அகில பாரதிய சன்னியாசி கள் சங்கம் நிறுவனர் சுவாமி ராமானந்த மஹராஜ், ஸ்ரீவாகீசர் மடாலயம் அவிநாசி ஆதீனம் காமாட்சிதாச சுவாமிகள் உள்ளிட்ட ஆதீனங்கள், துறவியர், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை, அகில பாரத சன்னியாசிகள் சங்கம், ஆர்ஷய வித்யா பீடம், மஹாத்மா காந்தி ஆசிரமம், விவேகானந்தா அறக்கட்டளை, ஆலம் விழுது அமைப்பினர் செய்திருந்தனர்.