/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயிலில் ஏற முடியாமல் அவதிப்படும் பயணிகள்
/
ரயிலில் ஏற முடியாமல் அவதிப்படும் பயணிகள்
ADDED : ஜன 22, 2026 05:01 AM
கோவை: பிளாட்பாரத்தை விட்டு சற்று தள்ளி ரயில் நிறுத்தப்படுவதால் பயணிகள், முதியோர் ஏற முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.
கோவை - மேட்டுப்பாளையம் இடையே மெமு ரயில் இயக்கப்படுகிறது. காரமடை, வடகோவை ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும். ரயில்வே ஸ்டேஷனின் இறுதிப் பகுதியில் பிளாட்பாரத்துக்கு வெளியே இந்த ரயில் நிறுத்தப்படுகிறது.
இதன் காரணமாக டிக்கெட் எடுத்து விட்டு, கடைசி நிமிடத்தில் வரும் பயணிகள் பிளாட்பாரத்தின் இறுதிக்கு பதற்றத்துடன் ஓடி வர வேண்டிய நிலை ஏற்படுகிறது. சில நாட்கள் ரயிலை தவற விடுகின்றனர்.
ரயில் படிகள் உயரத்தில் இருப்பதால் பிளாட்பாரம் இன்றி, முதியவர்களால் ரயிலில் ஏறவே முடிவதில்லை.
கோவை ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் ஸ்ரீதரிடம் கேட்டதற்கு, ''நான் பயிற்சியில் உள்ளேன். எதற்காக ரயில் அவ்வாறு நிறுத்தப்படுகிறது என கேட்டு சொல்கிறேன்,'' என்றார். அதன் பின் தொடர்பு கொண்ட போது போனை எடுக்கவில்லை.

