/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பாஸ்போர்ட் சேவா' வாகன முகாம் துவக்கம்
/
'பாஸ்போர்ட் சேவா' வாகன முகாம் துவக்கம்
ADDED : அக் 04, 2025 11:40 PM

கோவை: கோவை, வேளாண் பல்கலையில் நடமாடும் பாஸ்போர்ட் சேவா வாகன முகாம், துவக்கி வைக்கப்பட்டது.
கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில், நடந்த நிகழ்ச்சியில், டில்லியில் உள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பாஸ்போர்ட் சேவா திட்ட இயக்குனர் கோவேந்தன் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார். வேளாண் பல்கலை ஆராய்ச்சித்துறை இயக்குனர் ரவீந்திரன், கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சதீஷ் முன்னிலை வகித்தனர்.
பாஸ்போர்ட் அதிகாரி சதீஷ் கூறுகையில், ''ஏழு நாட்கள் நடக்கும் இந்நடமாடும் முகாமில், வேளாண் பல்கலை ஆசிரியர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட, 250 பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் பயனடைவர். இதற்கு கிடைக்கும் வரவேற்பு அடிப்படையில், முகாம் மேலும் நீட்டிக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.
பொள்ளாச்சி தலைமை தபால் நிலையத்தில் துவக்க உள்ள, பாஸ்போர்ட் சேவை குறித்து திட்ட இயக்குனர் கோவேந்தன் ஆய்வு மேற்கொண்டார்.