/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒட்டுவது... கிழிப்பது; இதே வேலையா போச்சு நடவடிக்கை இல்லாததால் குப்பை கூடிப்போச்சு
/
ஒட்டுவது... கிழிப்பது; இதே வேலையா போச்சு நடவடிக்கை இல்லாததால் குப்பை கூடிப்போச்சு
ஒட்டுவது... கிழிப்பது; இதே வேலையா போச்சு நடவடிக்கை இல்லாததால் குப்பை கூடிப்போச்சு
ஒட்டுவது... கிழிப்பது; இதே வேலையா போச்சு நடவடிக்கை இல்லாததால் குப்பை கூடிப்போச்சு
ADDED : அக் 21, 2025 11:35 PM

கோவை: கோவை மாநகரில் போஸ்டர் ஒட்டுவோரை, மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததால் பொது இடங்கள், அரசு கட்டடங்களில் 'போஸ்டர்' ஒட்டி அழகையே கெடுப்பது வாடிக்கையாகிவிட்டது.
கோவை மாநகரில் அரசு கட்டடங்களின் காம்பவுண்ட் சுவர், பாலங்கள், ரோட்டோர சுவர்கள், காலியிடங்களில் அரசியல் கட்சியினர், தனிநபர் துதிபாடும் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன.இது நகரின் துாய்மையை கெடுப்பதோடு, வாகன ஓட்டிகளின் கவனச்சிதறல், விபத்துக்கும் காரணமாகிறது.
போஸ்டர் ஒட்டுவதற்கு, மாநகராட்சி நிர்வாகம் தடைவிதித்துள்ளது. மேம்பாலங்களில் போஸ்டர் ஒட்டுவதை தவிர்க்க தமிழர் பாரம்பரியம், விலங்குகள் உள்ளிட்டவற்றின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஆனால், அதன் மீதே போஸ்டர் ஒட்டி அழகையே கெடுக்கின்றனர்.
கோவை அரசு கலைக் கல்லுாரி, அரசு தொழில்நுட்பக் கல்லுாரி, அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளின் சுவர்களில், அரசியல் கட்சியினரின் வாசகங்கள் எழுதப்படுகின்றன.
விதிமீறி போஸ்டர் ஒட்டுவோர் மீது, அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை பாயும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்து, இரு ஆண்டுகளுக்கு மேலாகிறது. நடவடிக்கைகள் இல்லாததால் 'என்ன செய்துவிடுவார்கள்?' என்ற அலட்சியமே, தொடர் விதிமீறலுக்கு வித்திடுகிறது.
ஒட்டப்படும் போஸ்டர்களை, துாய்மை பணியாளர்கள் கிழித்து அப்புறப்படுத்துகின்றனர்; சுவர் விளம்பரங்களையும் அழிக்கின்றனர். ஆனால் அடுத்த சில நாட்களில் அதே இடத்தில் போஸ்டர் ஒட்டப்படுவது, மாநகராட்சி நிர்வாகம் மீது பயமின்மையை காட்டுகிறது.
எனவே, வெறுமனே அறிவிப்பாக இல்லாமல் போஸ்டர் ஒட்டுவோர் மீது, மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.