sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பில்லர்களை தவிர்க்க 'பி.டி. ஸ்லாப்' தொழில்நுட்பம்

/

 பில்லர்களை தவிர்க்க 'பி.டி. ஸ்லாப்' தொழில்நுட்பம்

 பில்லர்களை தவிர்க்க 'பி.டி. ஸ்லாப்' தொழில்நுட்பம்

 பில்லர்களை தவிர்க்க 'பி.டி. ஸ்லாப்' தொழில்நுட்பம்


ADDED : டிச 27, 2025 05:10 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எங்கள் வீட்டின் வெளிப்புற கேட் மற்றும் மொட்டை மாடி கைப்பிடி சுவரில் உள்ள கிரில்கள் பெயின்ட் அடித்தாலும்: -சுரேஷ்: வெள்ளலுார்.: சாதாரண 'எனாமல் பெயின்ட்' அடித்தால், இரண்டு மூன்று வருடத்துக்குள் துரு பிடிக்கும். 'எபாக்சி ஆன்ட்டி கரோசிவ் பெயின்ட்' உபயோகித்தால் நீண்ட காலம் துரு பிடிக்காது.

எங்கள் பழைய வீட்டில் கழிவறையின் நீர் செல்லும் இடத்தில் சல்லடை பொருத்தியுள்ளோம். இருப்பினும் பூச்சிகள் வருகின்றன. எப்படி தடுக்கலாம்?: -தமிழ்ச்செல்வி: கோவில்பாளையம்.: வெளியேறும் கழிவுநீர் வெளியே உள்ள கழிவுநீர் கால்வாய்க்கு செல்கிறதா அல்லது 'சோக்பிட்' அமைத்துள்ளீர்களா? எதுவாக இருப்பினும் கழிவுநீர் வெளியேறும் இடத்தில் 'எஸ் டிராப்' அமைத்து வெளியேற்ற வேண்டும். அதில் எப்பொழுதும் சிறிது தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் வெளியே இருந்து பூச்சிகள் வருவதை தடுக்கலாம்.

வணிக வளாகம் கட்ட திட்டமிட்டுள்ளோம். பெரிய அறைகளுக்கு இடையே பில்லர்கள் வருகின்றன. இதை தவிர்க்க ஏதேனும் தொழில்நுட்பம் உள்ளதா?: -சதீஷ்குமார்: சிங்காநல்லுார்.: 'போஸ்ட் டென்ஷன்ட் ஸ்லாப்'(பி.டி. ஸ்லாப்) என்ற புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். கூரைக்கான கான்கிரீட் போட்ட பிறகு, ஏற்கனவே அதனுள் பொருத்தியுள்ள ஸ்டீல் கேபிள்களை இழுத்து இறுக்குவதன் மூலமாக சுமை தாங்கும் திறனை அதிகரிக்கும் ஒரு மேம்பட்ட கான்கிரீட் தளம் கிடைக்கும். மேலும், கூரை கான்கிரீட்டின் தடிமனை குறைப்பது மட்டுமின்றி, பில்லர் மற்றும் பீம்களுக்கு நீண்ட இடைவெளிகளை அமைக்கலாம். கட்டுமான செலவு மற்றும் நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்.

எங்கள் வீடு கட்டி 15 ஆண்டு ஆகின்றது. வெளிப்புறம் சன் ஷேடில் பூச்சு உதிர்ந்து கம்பிகள் தெரிகிறது. எவ்வாறு சரி செய்யலாம்?: -சந்திரன்: சன் ஷேடின் மீது மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தேங்கினால் அது கான்கிரீட்டின் உள்ளே இறங்கி கம்பிகள் துரு பிடித்து விரியும்.

அதனால், கம்பிக்கு கீழே உள்ள பூச்சு உதிர்ந்து விடும். இதை சரி செய்ய, கம்பியை சுற்றியுள்ள கலவையை சுத்தம் செய்து, கம்பி மீது ஆன்டி கரோசிவ் பெயின்ட் அடித்து, இணைப்புக்கான அமிலத்தை சிமென்ட் கலவையில் சேர்த்து பூசலாம்.

-ரமேஷ்குமார்: முன்னாள் தலைவர்: கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கம் (காட்சியா).:






      Dinamalar
      Follow us