/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எப்.,பென்ஷன் ஒன்பதாயிரம் ரூபாய்எச்.எம்.எஸ்., மாநில மாநாட்டில் வலியுறுத்தல்
/
பி.எப்.,பென்ஷன் ஒன்பதாயிரம் ரூபாய்எச்.எம்.எஸ்., மாநில மாநாட்டில் வலியுறுத்தல்
பி.எப்.,பென்ஷன் ஒன்பதாயிரம் ரூபாய்எச்.எம்.எஸ்., மாநில மாநாட்டில் வலியுறுத்தல்
பி.எப்.,பென்ஷன் ஒன்பதாயிரம் ரூபாய்எச்.எம்.எஸ்., மாநில மாநாட்டில் வலியுறுத்தல்
ADDED : டிச 15, 2025 05:03 AM
கோவை: தொழிலாளர் வருங்கால வைப்புநிதித்துறையால் பணிக்கு பின் வழங்கப்படும் பென்ஷன் தொகை குறைந்த பட்சம் ஒன்பதாயிரம் ரூபாயாக இருக்க வேண்டும் என்று எச்.எம்.எஸ். சங்கத்தின், 31-வது தமிழ் மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
கோவை காளப்பட்டி சாலையிலுள்ள சுகுணா கலையரங்கத்தில் எச்.எம்.எஸ். சங்கத்தின், 31-வது தமிழ் மாநில மாநாடு நேற்று நடந்தது. இதில் சங்கக் கொடியை அகில இந்திய பொது செயலாளர் ஹர்பஜன் சிங் சித்து ஏற்றி வைத்து பேசியதாவது:
மத்திய அரசின் நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களால், இதுவரை தொழிற்சங்கங்கள் போராடி வந்த தொழிலாளர் உரிமைகள் பறிபோய்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்புதிய சட்டத்தில் ஒரு தொழிற்சங்கத்தின் பதிவை ரத்து செய்து, அதனை முடக்க அரசுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது.
மேலும் சுரங்கங்கள், ரசாயன தொழிற்சாலைகள் உள்ளிட்ட தொழில்களில் பெண்களை பணிக்கு அமர்த்த இச்சட்டம் அனுமதிக்கிறது. எனவே இப்புதிய 4 தொழிலாளர் சட்ட தொகுப்பை ரத்து செய்ய வேண்டும்.
எட்டாவதுமத்திய ஊதிய குழுவின் அறிக்கையை விரைந்து பெற்று பரிந்துரைகளை தாமதமன்றி அமல்படுத்த வேண்டும். ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வேலை வாய்ப்பை அடிப்படை உரிமை ஆக மாற்றிட சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.
ஒப்பந்த தொழில் முறையை ஒழித்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் குறைந்த பட்ச பி.எப்.பென்ஷன் ஒன்பதாயிரம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக எச்.எம்.எஸ். மாநில பொது செயலாளர் ராஜாமணி வரவேற்றார்.
எச்.எம்.எஸ். மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநாட்டு மலர் வெளியிடப்பட்டது. மாநாட்டில், 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொருளாளர் ஆபத்சகாயம் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செயல் தலைவர் சுப்பிரமணியபிள்ளை முன்னிலை வகித்தார். எஸ்.ஆர்.எம்.யு. பொதுச்செயலாளர் கண்ணைய்யா துவக்க உரையாற்றினார். எச்.எம்.எஸ். சங்க அகில இந்திய தலைவர் ராஜாஸ்ரீதர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திரளான தொழிலாளர்கள் மாநிலம் முழுக்க இருந்து வந்திருந்தனர்.

