தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இடப்பிரச்னை தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை

இடப்பிரச்னை தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை

இடப்பிரச்னை தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை


ADDED : ஆக 18, 2026 07:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 07:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலுார்: வாகராயம்பாளையத்தில் பிரச்னைக்குரிய இடம் தொடர்பாக, தாசில்தார் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.

வாகராயம்பாளையத்தில், கோவிலுக்கு அருகில் உள்ள காலி இடம் தொடர்பாக, இரு தரப்பினருக்கு இடையில் பிரச்னை எழுந்தது. இரு தரப்பினரும் தங்களுக்கு சொந்தமானது எனக்கூறியதை அடுத்து பிரச்னை வலுத்தது. கருமத்தம்பட்டி போலீசில் இரு தரப்பு சார்பிலும் புகார் அளிக்கப்பட்டது.

பிரச்னை தொடர்பாக, சூலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தில்குமார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. ‘உரிய அளவீடுகள் செய்யப்படும். இரு தரப்பினரும் தங்களிடம் உள்ள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அதன்பின், உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும், அதுவரை அந்த இடத்தில் இரு தரப்பினரும் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது’ என, தாசில்தார் உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us