/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையை புதுப்பிக்க அமைதி ஊர்வலம்: கிராம மக்கள் நுாதன போராட்டம்
/
சாலையை புதுப்பிக்க அமைதி ஊர்வலம்: கிராம மக்கள் நுாதன போராட்டம்
சாலையை புதுப்பிக்க அமைதி ஊர்வலம்: கிராம மக்கள் நுாதன போராட்டம்
சாலையை புதுப்பிக்க அமைதி ஊர்வலம்: கிராம மக்கள் நுாதன போராட்டம்
ADDED : நவ 03, 2025 11:48 PM

பொள்ளாச்சி: வஞ்சியாபுரம் பிரிவு பகுதியில் இருந்து, நாட்டுக்கல்பாளையம் செல்லும் வழித்தடத்தில், 3 கி.மீ., துாரத்துக்கு புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என, ஜமீன்கோட்டாம்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே, வஞ்சியாபுரம் பிரிவு பகுதியில் இருந்து, நாட்டுக்கல்பாளையம் வழியே கிராம சாலை நீள்கிறது. இந்த ரோடு, சில ஆண்டுகளுக்கு முன் புதிதாக அமைக்கப்பட்டது.
தற்போது, பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக உள்ளது. அவ்வழியே வாகனங்களில் விரைந்து பயணிக்க முடியாமல், ஜமீன்கோட்டாம்பட்டி சுற்றுப்பகுதி கிராம மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
சாலையை சீரமைக்கக் கோரி, இரு ஆண்டுகளாக சப்-கலெக்டர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என, புகாரும் தெரிவிக்கப்படுகிறது.
இதனை துறை ரீதியான அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்ல, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து, தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
மக்கள் கூறியதாவது:
வஞ்சியாபுரம் பிரிவில் இருந்து, நாட்டுக்கல்பாளையம் செல்லும் வழத்தடத்தில், 3 கி.மீ., துாரத்துக்கான சாலை மிகவும் மோசமாக உள்ளது. இங்கு, கலெக்டர் நிதி மேம்பாட்டின் கீழ், 800 மீ., துாரத்திற்கு மட்டுமே சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், குண்டும் குழியுமாக உள்ள சாலையை புனரமைத்து புதிதாக அமைக்க வேண்டும். சேதமடைந்துள்ள சாலையில், நிலை தடுமாறி விபத்தில் சிக்கி, ஒருவர் உயிரிழந்துள்ளார். பலர் காயமடைந்து உள்ளனர்.
எனவே, 'பேட்ச்' பணி செய்யாமல், முழுமையாக புதிய தார் சாலை அமைக்க வேண்டும். இதேபோல், குடியிருப்பு பகுதிகளில் அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். குறிப்பாக, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

