தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கிணற்றில் விழுந்த மயில் பத்திரமாக மீட்பு

கிணற்றில் விழுந்த மயில் பத்திரமாக மீட்பு

கிணற்றில் விழுந்த மயில் பத்திரமாக மீட்பு


UPDATED : அக் 21, 2026 07:02 PM

ADDED : அக் 21, 2026 06:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 07:02 PM ADDED : அக் 21, 2026 06:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரமடை: காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியில், தோட்டம் ஒன்றில் இருந்த 40 அடி ஆழமுள்ள விவசாயக் கிணற்றில் எதிர்பாராதவிதமாக ஆண் மயில் ஒன்று தவறி விழுந்தது. கிணற்றுக்குள் மயில் தவித்துக் கொண்டிருப்பதை அப்பகுதி விவசாயிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவர்கள், இதுகுறித்து, மேட்டுப்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் அனில்குமார் தலைமையிலான மீட்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

கிணறு மிகவும் ஆழமாக இருந்ததால், வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் மீட்பு பணியில் இறங்கினர். தீயணைப்பு வீரர்கள் பிரத்யேக வலையைப் பயன்படுத்தி, கிணற்றின் ஆழத்தில் தவித்த மயிலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர கடினப் போராட்டத்திற்கு பிறகு, மயிலுக்கு எந்தவித காயமும் இன்றி அதை உயிருடன் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட மயில் உடனடியாக காரமடை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் மயிலின் உடல்நிலையை பரிசோதித்த பிறகு, அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விடுவிப்பதாகத் தெரிவித்தனர். மயிலை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களின் செயலை அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us