ADDED : செப் 13, 2026 09:23 PM
அ நிறம் | அளவு
கோவை: சிங்காநல்லுார் மாநகராட்சி காமராஜர் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள சாலையில் ரேஷன் கடை உள்ளது. இப்பகுதியில் மாநகராட்சி குப்பை வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களும் அங்கு குப்பை கொட்டி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று அந்த குப்பை குவியலில் மயில் தோகைகள் அதிகளவில் கிடந்தன. சில தோகைகள் முழுமையாகவும், பல தோகைகள் கிழிக்கப்பட்ட நிலையிலும் இருந்தன. பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
மயில் இறைச்சிக்காக அல்லது வேறு காரணங்களுக்காக கொல்லப்பட்டு, அதன் தோகைகள் அங்கு வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வனத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர் .
