/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலப்படம் செய்தால் அபராதம்; உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை
/
கலப்படம் செய்தால் அபராதம்; உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை
கலப்படம் செய்தால் அபராதம்; உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை
கலப்படம் செய்தால் அபராதம்; உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை
ADDED : செப் 24, 2024 11:53 PM

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையம், கோவை கேலக்ஸி ரோட்டரி சங்கத்துடன் இணைந்து, கிராமங்களில் பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது.
இம்மையத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் ஆதி கோபாலகிருஷ்ணன் பேசுகையில், ''சுத்தமான, பாதுகாப்பான உணவு பொருட்களை உட்கொள்ளும் போது, ஆரோக்கியமான, நோயற்ற சமுதாயம் உருவாகும்.
தனிமனிதனின் சுயலாபத்துக்காக உணவு பொருட்களில் கலப்படம் மற்றும் கலர் சாயங்கள் ஏற்றி வாடிக்கையாளர்களை கவரும் வகையில் விற்பனை செய்வதால் பயன்படுத்துவோரின் உடல் நலம் கெடுகிறது.
இதை கருத்தில் கொண்டு உணவு பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், விநியோகம் செய்பவர்கள், சேமிப்பு கிடங்குகள், மளிகை கடை, டீக்கடை, ஓட்டல், அன்னதான கூடங்கள் மற்றும் எந்த வகையான உணவுப்பொருட்களை விற்பனை செய்தாலும் உணவு பாதுகாப்பு தர சான்றிதழை பெற்று தான் விற்பனை செய்ய வேண்டும். சான்றிதழ் பெற்றிருந்தாலும், தாங்கள் விற்பனை செய்யும் உணவு பொருள்களில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அபராதம் விதிக்கப்படும்.
மேலும், புதிய உணவுப் பொருட்கள் தொடர்பான தொழில் தொடங்குபவர்கள், லைசென்ஸ் புதுப்பிக்காமல் இருப்பவர்கள், foss.fssai.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு மற்றும் புதுப்பித்தல் செய்து கொள்ளலாம்.
பொதுமக்கள் தங்களுக்கு தெரிந்த பகுதியில் உணவு பொருள் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டால், 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
இது தவிர, TNFSD என்ற மொபைல் செயலி வாயிலாகவும், புகார்களை தெரிவிக்கலாம் என்றார்.
நிகழ்ச்சியில், ஒரு பொருளில் கலப்படம் எவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்பதை கண்டறியும் விதத்தினை நேரடியாக செய்து காண்பித்தார். இதற்கான துண்டு பிரசுரங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய மனித மேம்பாட்டு மைய இயக்குனர் சகாதேவன் செய்திருந்தார்.