/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒருகால பூஜை நடக்கும் கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம்
/
ஒருகால பூஜை நடக்கும் கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம்
ஒருகால பூஜை நடக்கும் கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம்
ஒருகால பூஜை நடக்கும் கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம்
ADDED : செப் 17, 2025 09:54 PM
சூலூர் ; ஒரு கால பூஜை நடக்கும் கோவில் பூசாரிகளுக்கு, துறை ரீதியான ஓய்வூதியம் வழங்க வேண்டும், என, கோவில் பூசாரிகள் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை மாவட்ட கோவில் பூசாரிகள் நல சங்கம் சார்பில் மாவட்ட மாநாடு சூலூரில் நடந்தது. மாநில துணைத்தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மாநில தலைவர் வாசு பேசுகையில், 'எண்ணற்ற கோவில்களில் திருப்பணி செய்யப்பட்டுள்ளன. ஏராளமான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதற்கு நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம்,' என்றார்.
ஒரு கால பூஜை நடக்கும் கோவில் பூசாரிகளுக்கு, துறை ரீதியான ஓய்வூதியம் வழங்க வேண்டும். கிராம கோவில்களுக்கு இலவசமாக குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வேண்டும். முறையாக பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு விருது வழங்க வேண்டும்.
பூசாரிகளுக்கு குடியிருப்புகள், காப்பீடு திட்ட சலுகைகள் அறநிலையத்துறை சார்பில் வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெற உள்ள வருமான உச்ச வரம்பை, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில பொருளாளர் சுந்தரம், மாநில செயலாளர் சங்கர், மாவட்ட செயலாளர் நரேஷ்குமார், மாவட்ட தலைவர் நடராஜன், ஒருங்கிணைப்பாளர் அல்லி முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.