/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எப்., பென்ஷன் ரூ.9000 வழங்க கோரி பென்ஷனர்கள் ஆர்ப்பாட்டம்
/
பி.எப்., பென்ஷன் ரூ.9000 வழங்க கோரி பென்ஷனர்கள் ஆர்ப்பாட்டம்
பி.எப்., பென்ஷன் ரூ.9000 வழங்க கோரி பென்ஷனர்கள் ஆர்ப்பாட்டம்
பி.எப்., பென்ஷன் ரூ.9000 வழங்க கோரி பென்ஷனர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 14, 2025 01:21 AM
கோவை:கோவை மாவட்ட பி.எப்., பென்ஷனர்கள் நலச்சங்கம் சார்பில், குறைந்த பட்ச பென்சன், 9000 ரூபாய் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை கலெக்டர் அலுவலகம் முன்புஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு, தலைமை வகித்த மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:
மத்திய அரசு ஓய்வூதியத்தை உயர்த்தவில்லை. மாநில அரசு பென்ஷனர்களின் கஷ்டத்தை நிவர்த்தி செய்யும் விதமாக குறைந்த பட்சமாக, 1600 ரூபாய் ஓய்வூதியமாக கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஹரியானா, டில்லி மற்றும் புதுச்சேரி அரசுகள் வழங்கி வருகின்றன. தி.மு .க., கடந்த சட்டசபை தேர்தலில், 5000 ரூபாய் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தது. அந்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. சொன்னபடி பென்ஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கோரிக்கைகயை நிறைவேற்ற கோரி, கோவை கலெக்டரிடம் மனு அளித்தனர். போராட்டத்தில 200 க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.