/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெரு நாய்களால் மக்கள் அச்சம்
/
தெரு நாய்களால் மக்கள் அச்சம்
ADDED : டிச 05, 2025 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர்: அன்னூர் பேரூராட்சியில், அ.மு. காலனியில், எக்ஸ்சேஞ்ச் ரோடு, ராஜிவ் வீதி, ஆசாத் வீதி பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் திரிகின்றன. இவை சாலையோரத்தில் உள்ள கிடக்கும் உணவு பொருட்கள் மற்றும் குப்பைகளை சூறையாடுகின்றன. பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோரை துரத்துகின்றன.
இதுகுறித்து அ.மு.காலனி மக்கள் கூறுகையில், 'நாய்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து விட்டது. சாலையில் நடப்போரை துரத்துகின்றன. வீதியில் நடக்கவே அச்சமாக உள்ளது.
இதுகுறித்து அன்னூர் பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்,' என்றனர்.

