/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை, சாக்கடை வசதி கேட்டு மக்கள் தொடர்ந்து கோரிக்கை
/
சாலை, சாக்கடை வசதி கேட்டு மக்கள் தொடர்ந்து கோரிக்கை
சாலை, சாக்கடை வசதி கேட்டு மக்கள் தொடர்ந்து கோரிக்கை
சாலை, சாக்கடை வசதி கேட்டு மக்கள் தொடர்ந்து கோரிக்கை
ADDED : பிப் 15, 2024 06:42 AM

கோவை : தடாகம் ரோடு, இடையர்பாளையம் அருகே சிவாஜி காலனி பகுதி மக்கள், அடிப்படை வசதிகள் கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருவதாக புலம்புகின்றனர்.
சிவாஜி காலனி விரிவாக்கம் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் நடராஜன், அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை நிறுவன தலைவர் புஸ்பானந்தம் ஆகியோர் கூறியதாவது:
தடாகம் ரோடு, இடையர்பாளையம் அருகே சிவாஜி காலனி உள்ளது. இங்குள்ள சவுடாம்பிகா நகர், சிம்சன் நகரில் உள்ள, ஏழு ரோடுகள் படுமோசமாக உள்ளன. இங்கு, 20 ஆண்டுகளாக சாக்கடை வசதியே இல்லை.
மாநகராட்சி, 34வது வார்டுக்கு உட்பட்ட இப்பகுதியில், மழை காலங்களில் பெரும் சிரமங்களை சந்திக்கிறோம். ரோடு, சாக்கடை அமைக்க அளவீடும் செய்துவிட்டனர்.
அதன்பின் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் இல்லை. இங்கு, 2,100 பேர் வசிக்கிறோம். எங்கள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றித்தர வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

