/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை மைய தடுப்பான் அமைக்க முடியாது பொறியாளர் பதிலால் மக்கள் அதிர்ச்சி
/
சாலை மைய தடுப்பான் அமைக்க முடியாது பொறியாளர் பதிலால் மக்கள் அதிர்ச்சி
சாலை மைய தடுப்பான் அமைக்க முடியாது பொறியாளர் பதிலால் மக்கள் அதிர்ச்சி
சாலை மைய தடுப்பான் அமைக்க முடியாது பொறியாளர் பதிலால் மக்கள் அதிர்ச்சி
ADDED : ஜன 20, 2025 06:20 AM
அன்னுார் : கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில், தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் அலுவலகத்திற்கு, கவுசிகா நீர்க்கரங்கள் அமைப்பின் சார்பில் சதாசிவம் சிவசாமி அனுப்பிய மனுவில், 'கணேசபுரத்தை அடுத்த எல்லப்பாளையம் பிரிவில் அடிக்கடி விபத்து நடக்கிறது. இங்கு மைய தடுப்பான் அமைக்க வேண்டும்,' என தெரிவித்திருந்தனர். இதற்கு தேசிய நெடுஞ்சாலை துறையின், கோவை கோட்ட பொறியாளர் தனபாலன் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில்,'மனுதாரர் குறிப்பிட்டுள்ள சாலை இருவழிச் சாலையாக உள்ளது. எனவே மைய தடுப்பான் அமைக்க போதுமான இட வசதி இல்லை. இந்த சாலை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் போது மைய தடுப்பான் அமைக்கப்படும்,' என பதில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எல்லப்பாளையம் மக்கள் கூறுகையில், 'இங்கு மூன்று சாலைகள் சந்திக்கின்றன. தொழிற்சாலைகளுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சந்திப்பு வழியாக செல்கின்றன. இங்கு வாகனங்கள் முந்தி செல்லும்போது அடிக்கடி விபத்து நடக்கிறது. சாலை மைய தடுப்பான் அமைக்கும் அளவுக்கு சாலை அகலம் இல்லை என கோட்ட பொறியாளர் தெரிவித்துள்ளார். ஆனால் இதைவிட அகலம் குறைவாக உள்ள அன்னுார் கடைவீதியில் மைய தடுப்பான் அமைக்கப்பட்டுள்ளது.
அதிகாரியின் பதில் ஏமாற்றம் அளிக்கிறது. அதிகாரிகள் நேரில் கள ஆய்வு செய்து, எல்லப்பாளையம் பிரிவில், ஒரு கி.மீ., தொலைவிற்கு சென்டர் மீடியன் அமைத்து, வாகனங்கள் விபத்துக்குள்ளாவதை தடுக்க வேண்டும்,' என்றனர்.