/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலத்தில் இருந்து வடியும் மழை நீரால் மக்கள் அவதி
/
பாலத்தில் இருந்து வடியும் மழை நீரால் மக்கள் அவதி
பாலத்தில் இருந்து வடியும் மழை நீரால் மக்கள் அவதி
பாலத்தில் இருந்து வடியும் மழை நீரால் மக்கள் அவதி
ADDED : டிச 06, 2025 05:28 AM

கிணத்துக்கடவு: மழை பெய்யும் நேரத்தில், கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் உள்ள சர்வீஸ் ரோட்டின் முக்கிய இடங்களில், ஆங்காங்கே மழை நீர் ஒழுகுவதால் நடந்து செல்லும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
பாலத்தில் இருந்து மழை நீர் வடிந்து செல்ல அங்கங்கே குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. இதில் பல இடங்களில் குழாய்கள் சேதமடைந்தும், கசிவு ஏற்பட்டும் இருப்பதால் அரசு மேல்நிலைப் பள்ளி, பழைய செக்போஸ்ட் அருகில் உள்ள பஸ் ஸ்டாப் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேம்பால இடுக்குகள் வழியாக மழை நீர் சர்வீஸ் ரோட்டில் விழுகிறது. இதனால் மக்கள் சென்றுவர சிரமம் ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்க, மழைநீர் செல்ல பதிக்கப்பட்ட குழாய்களை மீண்டும் சீரமைப்பு செய்து, பாலத்தின் இடுக்குகள் வழியாக மழை நீர் ஒழுகுவதை தடுக்க தேசிய நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோன்று, மேம்பாலம் முடியும் இடத்தில் மழை நீர் வெளியேற்றும் குழாய் ரோடு வரை மட்டுமே உள்ளது. இதனால் ஆறு போல் ரோட்டில் மழை நீர் வழிந்து ஓடுகிறது. இதை சர்வீஸ் ரோட்டோரம் உள்ள வடிகால் வரை நீட்டிப்பு செய்ய வேண்டுமென, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

