/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டோரத்தில் கோழிக்கழிவுகள் கடும் துர்நாற்றத்தால் மக்கள் அவதி
/
ரோட்டோரத்தில் கோழிக்கழிவுகள் கடும் துர்நாற்றத்தால் மக்கள் அவதி
ரோட்டோரத்தில் கோழிக்கழிவுகள் கடும் துர்நாற்றத்தால் மக்கள் அவதி
ரோட்டோரத்தில் கோழிக்கழிவுகள் கடும் துர்நாற்றத்தால் மக்கள் அவதி
ADDED : மே 09, 2025 06:48 AM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி- கோட்டூர் ரோட்டில் இருந்து, ஜோதிநகர் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் ரோட்டில் கோழி கழிவுகளை திறந்தவெளியில் வீசிச் செல்வதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
பொள்ளாச்சி - கோட்டூர் ரோடு பெட்ரோல் பங்க்கையொட்டி செல்லும் ரோடு வழியாக, ஜோதிநகர் மற்றும் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புகளுக்கு செல்லும் முக்கிய வழித்தடம் உள்ளது.
இந்த ரோட்டில், தனியார் மருத்துவமனை, திருமண மண்டபம் மற்றும் கடைகளும் உள்ளன. போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டில் இரவு நேரத்தில் கோழி இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து மூட்டை, மூட்டையாக வீசிச் செல்கின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
முக்கிய வழித்தடமாக உள்ள இந்த ரோட்டில், இரவு நேரங்களில் இருளாக இருப்பதால் வாகனங்களில் கொண்டு வந்து, கோழி இறைச்சிக்கழிவுகளை வீசிச் செல்கின்றனர்.அங்கு சுற்றித்திரியும் நாய்கள் அவற்றை உட்கொள்கின்றன.
மேலும், பன்றிகள், குப்பையை கிளறுவதால், கழிவுகள் ரோட்டில் பரவி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. அவ்வழியாக வாக்கிங் செல்வோர் கடும் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. இப்பகுதியில் இருப்போர் மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்.
இது குறித்து, பேரூராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. சுகாதாரத்தை பாதுகாக்க அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, கோழி இறைச்சிக்கழிவுகளை அகற்ற வேண்டும். அங்கு கழிவுகளை வீசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.