/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடு, கடைகளை சூறையாடிய காட்டு யானைகளால் மக்கள் பீதி
/
வீடு, கடைகளை சூறையாடிய காட்டு யானைகளால் மக்கள் பீதி
வீடு, கடைகளை சூறையாடிய காட்டு யானைகளால் மக்கள் பீதி
வீடு, கடைகளை சூறையாடிய காட்டு யானைகளால் மக்கள் பீதி
ADDED : அக் 14, 2025 11:00 PM

வால்பாறை; வால்பாறை அருகே, நள்ளிரவில் வீடு, கடைகளை சூறையாடிய காட்டு யானைகளிடம் இருந்து அதிர்ஷ்டவசமாக மக்கள் உயிர் தப்பினர்.
கேரள மாநிலம், மளுக்கப்பாறை வழியாக நேற்று நள்ளிரவு வந்த ஐந்து காட்டு யானைகள், கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள சோலையாறு அணையின், இடதுகரையில், அதிகாலை நேரத்தில், இரண்டு கடைகளை உடைத்து சேதப்படுத்தின.
அதன்பின், குடியிருப்புக்குள் நுழைந்து, மணிகண்டன் என்பவரின் வீட்டை இடித்தன. வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தவர்கள் பின்பக்கம் வழியாக வெளியேறி உயிர் தப்பினர். மணிகண்டன் வீட்டின் அருகில் காலியாக இருந்த இரு வீடுகளையும், யானைகள் சேதப்படுத்தின. இந்த சம்பவத்தால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'தகவல் தெரிவித்து, மூன்று மணி நேரம் கழித்து தான் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யானைகளை விரட்டினர். இப்பகுதியில் மூன்று ஆண்டுகளாக தெரு விளக்குகள் எரியவில்லை. இரவு நேரத்தில் வனவிலங்குகள் வந்தால் தெரிவதில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால் மீண்டும் உயிர்சேதம் ஏற்படுவதற்கு முன், நகராட்சி, உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும்' என்றனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'உயர்கோபுர மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.