/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விதிமீறி விடிய, விடிய பட்டாசு வெடிப்பதால் ...மக்கள் மனசு
/
விதிமீறி விடிய, விடிய பட்டாசு வெடிப்பதால் ...மக்கள் மனசு
விதிமீறி விடிய, விடிய பட்டாசு வெடிப்பதால் ...மக்கள் மனசு
விதிமீறி விடிய, விடிய பட்டாசு வெடிப்பதால் ...மக்கள் மனசு
ADDED : அக் 21, 2025 11:20 PM

வி திமீறி விடிய, விடிய பட்டாசு வெடிப்பதால், முதியோர், வளர்ப்புப்பிராணிகள், மனநலம் குன்றியோர், இதய பலவீனம் உள்ளவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அதிக சத்தம் கொண்ட பட்டாசு வெடிப்பதை தவிர்க்கலாம் அல்லது குறைத்துக்கொள்ளலாம் என்பதே, சமூக ஆர்வலர்கள் பலரின் கருத்து.
இது குறித்து, கோவை மக்கள் என்ன சொல்கின்றனர்?
சிவகாசியின் கதி என்ன? தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே பட்டாசு சத்தம் கேட்கும். அதை ஒரே நாள் ஆக்கி, வெறும் 2 மணி நேரம் என்றால் எப்படி? தீபாவளியை நம்பிதான் சிவகாசியே இருக்கிறது. அதற்கு அரசு என்ன ஏற்பாடு செய்யும்? - ஜெயலட்சுமி ராம்நகர்
அளவோடு வெடிக்கலாம் இது மழை நேரம். மேக மூட்டமாக உள்ளது. அதோடு பட்டாசு புகை சேரும்போது, மக்கள் சுவாசிக்க சிரமம் ஏற்படும். டெல்லியில் என்ன நடந்தது என்பதை பார்த்தோம். மகிழ்ச்சிக்காக ஓரிரு பட்டாசு வெடித்து விட்டு விலகுவதுதான் நல்லது. - திரிஷா மேட்டுப்பாளையம்
அரசுக்கே தெரியும் விதி எல்லாம் சரிதான். ஆனால், எல்லா விதிகளையும் எல்லாரும் பின்பற்ற முடியாது. அது தெரிந்து தான், அரசே அறிவிப்பு வெளியிட்டு விட்டு அமைதியாக இருக்கிறது. போலீசுக்கே தெரியும். - தங்கராஜ் கிராஸ்கட் சாலை
இது மட்டுமா விதிமீறல்? அரசாங்கம் சொல்லும் நேரத்தில் எல்லோரும் வெடிக்க முடியாது. முன்னதாக அல்லது தாமதமாக வெடிக்கலாம். இதனால் என்ன ஆகிவிட போகிறது? விதிமீறல் இதில் மட்டுமா நடக்கிறது? எவ்வளவோ விஷயங்களில் விதி மீறப்படுகிறது. - செல்வராஜ் காந்திபுரம்
உணராத ஆபத்து இத்தனை டெசிபல் அளவை தாண்டாத வெடிகள் தான் வெடிக்கலாம் என்று விதி இருக்கிறது. ஆனால், மிகவும் அதிகமான சத்தம் வரும் பட்டாசுகளால் பெரியவர்கள், கால்நடைகள், பறவைகள் படும்பாடு பரிதாபமானது. யாரும் துாங்க முடியவில்லை. மற்றவர்களை துன்பப்படுத்தி என்ன கொண்டாட்டம் என்பதை, இளம் தலைமுறையினர் சிந்திக்க வேண்டும். - கண்ணன் மோட்டார் சர்வீஸ்
பெற்றோரே ஊக்கம் பள்ளிகளுக்கு லீவு விட்டதால், சிறுவர்கள் தீபாவளிக்கு முன்பே பட்டாசு வெடிக்க தொடங்கி விட்டனர். அவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டிய பெற்றோரே, ஊக்குவிப்பது வருத்தமாக இருக்கிறது. அபராதத்தோடு நில்லாமல் சிறை தண்டனையும் வழங்கினால், விதிமீறல் குறையும். --- தங்கராஜ் முன்னாள் பி.எஸ்.என்.எல். ஊழியர்