/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒடிசாவில் கஞ்சா வாங்கி வந்து கோவையில் விற்றவர்கள் கைது
/
ஒடிசாவில் கஞ்சா வாங்கி வந்து கோவையில் விற்றவர்கள் கைது
ஒடிசாவில் கஞ்சா வாங்கி வந்து கோவையில் விற்றவர்கள் கைது
ஒடிசாவில் கஞ்சா வாங்கி வந்து கோவையில் விற்றவர்கள் கைது
ADDED : மே 01, 2025 04:14 AM
கோவை : ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த மூவரை, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கடந்த 28ம் தேதி ஒரு சிலர், ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், கோவை ரயில்வே ஸ்டேஷன் சென்று சோதனை செய்தனர்.
ரயிலில் இருந்து இறங்கி வந்த மூவரின் பேக்கை, சோதனை செய்தனர். அதில், 2.100 கிலோ கிராம் கஞ்சா இருந்தது. மூவரையும் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ், 23, திருப்பூரை சேர்ந்த நவுபல், 20, சிவகங்கையை சேர்ந்த ஸ்ரீகாந்த், 20 என்பது தெரியவந்தது. நண்பர்களான மூவரும், ஒடிசா சென்று குறைந்த விலைக்கு கஞ்சா வாங்கி வந்து, சிறு பொட்டலங்களில் போட்டு, அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து, மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.