/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் முறையாக வழங்க கோரி காலிக்குடத்துடன் மக்கள் மறியல்
/
குடிநீர் முறையாக வழங்க கோரி காலிக்குடத்துடன் மக்கள் மறியல்
குடிநீர் முறையாக வழங்க கோரி காலிக்குடத்துடன் மக்கள் மறியல்
குடிநீர் முறையாக வழங்க கோரி காலிக்குடத்துடன் மக்கள் மறியல்
ADDED : மார் 05, 2024 12:28 AM

ஆனைமலை;ஆனைமலை அருகே, குடிநீர் முறையாக வழங்க கோரி காலிக்குடங்களுடன் மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனைமலை அருகே, அங்கலக்குறிச்சி புதுக்காலனியில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் இல்லை எனக்கூறி, பொதுமக்கள் திடீரென நேற்று பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'குடிநீர் முறையாக வழங்க கோரியும் நடவடிக்கை இல்லை. இதனால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீருக்காக அலையும் நிலையே உள்ளது. முறையாக நீர் வினியோகிக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம்,' என்றனர்.
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு நடத்தி, அதிகாரிகளிடம் தெரிவித்து முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.