/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுரங்கப்பாதை வசதி கோரி மக்கள் மறியல்: பள்ளி, கல்லுாரி செல்வோர் அவதி

ADDED : டிச 04, 2025 07:04 AM

போத்தனூர்: கோவை மேற்கு புறவழி சாலை கோவை --- பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில், மைல்கல் அருகே துவங்குகிறது. அறிவொளி நகர், விவேகானந்தர் சதுக்கத்தை கடந்து செல்கிறது.
இதனால் அப்பகுதியில் வசிப்போர் சாலையை, கடந்து செல்ல இயலாத நிலை நிலவுகிறது. இவ்விடத்தில் சுரங்கப்பாதை அமைக்க கோரி, நேற்று காலை இப்பகுதியை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட, 40 பேர் புறவழி சாலையில் வாகனங்களை நிறுத்தி, மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த போலீஸ் உதவி கமிஷனர் மகேஷ்குமார், நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜாவிடம், அங்கிருந்தோர், அவ்விடத்தில் சுரங்கப்பாதை அமைக்க கோரினர். அதற்கு அவர்கள், தொழில்நுட்ப ரீதியாக அதற்கான சாத்தியம் குறைவு என்றனர்.
அப்போது பேரூர் சரக டி.எஸ்.பி. சிவகுமார், உதவி கோட்ட பொறியாளரை மொபைல் போனில் தொடர்புகொண்டு வரும், 8ல் அனைத்து தரப்பினர் பங்கேற்கும் கூட்டம் நடத்தி முடிவு எடுக்கலாம், என கூறினார்.
இதை அனைவரும் ஏற்றுக் கொண்டு, சாலை மறியலை கைவிட்டனர். இதையடுத்து காலை, 8:00 முதல், 10:30 மணி வரை நீடித்த மறியல், முடிவுக்கு வந்தது. மறியலால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளாகினர்.