/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சென்னப்பசெட்டிபுதுாரில் மழைநீர் வீடுகளுக்குள் புகுவதால் மக்கள் அவதி
/
சென்னப்பசெட்டிபுதுாரில் மழைநீர் வீடுகளுக்குள் புகுவதால் மக்கள் அவதி
சென்னப்பசெட்டிபுதுாரில் மழைநீர் வீடுகளுக்குள் புகுவதால் மக்கள் அவதி
சென்னப்பசெட்டிபுதுாரில் மழைநீர் வீடுகளுக்குள் புகுவதால் மக்கள் அவதி
ADDED : மே 17, 2025 02:30 AM

கருமத்தம்பட்டி : சென்னப்பசெட்டி புதுாரில் ரோட்டில் தேங்கும் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கருமத்தம்பட்டி அடுத்த பதுவம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது சென்னப்பசெட்டிபுதுார். வாகராயம்பாளையம் - அன்னூர் ரோட்டை ஒட்டி இந்த ஊர் உள்ளது. கருவலூர் - கோவில் பாளையம் ரோடு இவ்வூர் வழியாக செல்கிறது.
நான்கு ரோடுகள் சந்திப்பதாலும், போக்குவரத்து அதிகரித்து வருவதாலும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரோடு விரிவாக்கம் செய்யும் பணி நடந்தது. நான்கு புறமும் ரோடு அகலப்படுத்தப்பட்டு, சென்டர் மீடியன் கட்டப்பட்டது.
இந்நிலையில் இரு நாட்களுக்கு முன், சுற்றுவட்டார பகுதியில் பெய்த கன மழையால், அன்னுார் ரோட்டின் மேற்கு பகுதியில் மழை நீர் தேங்கியது. அருகில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால், மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
ரோடு விரிவாக்கம் செய்யும் முன், பெரிய மழை பெய்தாலும் மழை நீர் ரோட்டில் தேங்காது. ஆனால், விரிவாக்கம் செய்த பின், அன்னுார் ரோட்டில் மேற்கு பகுதியில் மழைநீர் அதிகளவு தேங்கி நிற்கிறது. எங்கள் வீடுகளுக்குள் மழை நீர் வருகிறது. வாகனங்கள் செல்லும் போதும், பலத்த காற்று வீசும் போதும் மழை நீர் வீடுகளுக்குள் வருகிறது. மழைநீர் வடிகால் அமைக்காமல், சென்டர் மீடியன் அமைத்து விட்டனர். இதனால் மழைநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. புகார் அளித்தும் அதிகாரிகள் வந்து பார்க்கின்றனர். ஆனால், இதுவரை எதுவும் செய்யவில்லை. மழை நீர் வீட்டுக்குள் வராமல் இருக்க, வீட்டின் முன் மண்ணை கொட்டியுள்ளோம். மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.