/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதர் மண்டி கிடக்கும் கழிவறை; தாலுகா அலுவலகத்தில் மக்கள் அவதி
/
புதர் மண்டி கிடக்கும் கழிவறை; தாலுகா அலுவலகத்தில் மக்கள் அவதி
புதர் மண்டி கிடக்கும் கழிவறை; தாலுகா அலுவலகத்தில் மக்கள் அவதி
புதர் மண்டி கிடக்கும் கழிவறை; தாலுகா அலுவலகத்தில் மக்கள் அவதி
ADDED : செப் 17, 2025 09:53 PM

சூலுார் ; சூலுார் சந்தைப்பேட்டை ரோட்டில் தாலுகா அலுவலகம் உள்ளது. இவ்வளாகத்தில் ஆதார் மையம், இ-சேவை மையமும் செயல்படுகிறது. இந்த அலுவலகங்களுக்கு தினமும், பல்வேறு சான்றுகளை பெற விண்ணப்பங்களை அளிக்கவும், சான்றுகள் பெறவும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு என, தனித்தனியாக கழிவறைகள் உள்ளன. சுற்றுச்சுவர் அருகே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உள்ள கழிப்பறை புதர் மண்டி கிடப்பதால், மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,' தொலைதூரத்தில் இருந்து விண் ணப்பங்களை அளிக்க வருகிறோம். அலுவலர்கள் இல்லாத நிலையில் காத்திருக்க வேண்டி உள்ளது. இயற்கை உபாதையை கழிக்க கழிவறைக்கு செல்லும் போது, அவை பராமரிப்பின்றி உள்ளது. புதர் மண்டி கிடக்கிறது. விஷப்பூச்சிகள் இருக் குமோ என்று அச்சப்பட வேண்டி உள்ளது. இரு கழிவறைகளில் ஆணுக்கு எது, பெண்ணுக்கு எது என்று அடையாளம் காண முடியவில்லை. கழிவறைக்குள் மது பாட்டில்கள் கிடக்கின்றன. உரிய பராமரிப்பு பணிகளை அதிகாரிகள் செய்ய வேண்டும்,' என்ற னர்.