தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆக்கிரமிப்புகள் தாராளம் நெரிசலில் மக்கள் தவிப்பு

ஆக்கிரமிப்புகள் தாராளம் நெரிசலில் மக்கள் தவிப்பு

ஆக்கிரமிப்புகள் தாராளம் நெரிசலில் மக்கள் தவிப்பு


ADDED : செப் 28, 2026 09:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 09:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: உடுமலை ராஜேந்திரா ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளால், பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

உடுமலையில் பிரதான ரோடுகளில் ஒன்றாக ராஜேந்திரா ரோடு உள்ளது. இந்த ரோட்டில் நகராட்சி சந்தை, அரசு மேல்நிலைப்பள்ளி, வணிக நிறுவனங்கள், ரயில்வே ஸ்டேஷன் உள்ளன.

இதனால், இந்த ரோட்டில் போக்குவரத்து அதிகளவில் காணப்படும். மேலும் தள்ளுவண்டிகள், கடைகளின் ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

ஆக்கிரமிப்புகளால் சில நேரங்களில் சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. இதுகுறித்து பல முறை நகராட்சிக்கு மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நடவடிக்கை எடுக்காததால், நகராட்சியினர் மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

எனவே, நகராட்சியினரும், போலீசாரும் இணைந்து, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள், வாகன ஓட்டுனர்கள் எதிர்பார்க்கின்றனர். அப்போது தான் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us