/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தனி மனித ஒழுக்கம் இல்லாதவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவர்'
/
'தனி மனித ஒழுக்கம் இல்லாதவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவர்'
'தனி மனித ஒழுக்கம் இல்லாதவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவர்'
'தனி மனித ஒழுக்கம் இல்லாதவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவர்'
ADDED : அக் 26, 2025 02:56 AM
கோவை: 'பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் - தண்டனைகளும், பின்விளைவுகளும்' எனும் தலைப்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி, கோவை அரசு கலைக் கல்லுாரியில் நடந்தது.
நிகழ்ச்சியில், வழக்கறிஞர் நரேந்திரன் பேசுகையில், ''பணியிடத்தில் தனிமனித ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். தனி மனித ஒழுக்கம் இல்லாதவர்களே, பாலியல் துன்புறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவர். பணியிடத்தில் துன்புறுத்தல் இல்லாத சூழலை உறுதி செய்வது அவசியம்.
இதற்காக, நிறுவனங்கள் உள் புகார்கள் குழுவை ஏற்படுத்துவது அவசியம். உள் புகார்கள் குழுவுக்கு அளிக்கப்படும் புகார்கள், முறையாக விசாரிக்கப்பட வேண்டும். பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்வதும் அவசியம்,'' என்றார்.உளவியல் துறை இணைப்போராசிரியர் செல்வராஜ் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் எழிலி தலைமை வகித்தார். துணை முதல்வர் கனகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.