/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மிளகு நாற்றுகள் விற்பனைக்கு தயார்
/
மிளகு நாற்றுகள் விற்பனைக்கு தயார்
ADDED : நவ 29, 2024 06:59 AM

மேட்டுப்பாளையம்; கல்லாறு தோட்டக்கலை பண்ணையில் 35 ஆயிரம் மிளகு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.
மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலையில் தமிழக அரசின் கல்லாறு தோட்டக்கலை பண்ணை அமைந்துள்ளது. இங்கு எலுமிச்சை, கொய்யா, மாதுளை, பலா, திராட்சை, மங்குஸ்தான், துரியன், லிச்சி, ரம்புட்டான், மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், இலவங்கப்பட்டை, பாக்கு போன்ற நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தற்போது இங்கு 35 ஆயிரம் மிளகு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதே போல் ஏற்கனவே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பாக்கு நாற்றுகள் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர்.
இதுகுறித்து கல்லார் அரசு தோட்டக்கலை பண்ணை அதிகாரிகள் கூறுகையில், கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணையில், நான்கு ஆண்டுகளில் பலன் தரக்கூடிய
மொஹித் நகர் பாக்கு மர நாற்றுகள் மற்றும் மங்களா பாக்கு மர நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஒரு பாக்கு மர நாற்று ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. 35 ஆயிரம் மிளகு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மிளகு நாற்றின் விலை ஒன்று ரூ.12 ஆகும், என்றனர்.