ADDED : செப் 02, 2026 09:02 PM
அ நிறம் | அளவு
பேரூர்: பேரூர் பெரியகுளம் குளக்கரை சாலையோரங்களில், குப்பை கொட்டி வருவதால், அப்பகுதி முழுவதும் குப்பை மேடாக மாறி துர்நாற்றம் வீசி வருகிறது.
பேரூர் பேரூராட்சிக்குட்பட்ட பேரூர் பெரியகுளக்கரையில், புட்டுவிக்கியில் இருந்து பேரூர் வரை, 2 கி.மீ., தொலைவிற்கு தார்சாலை உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இக்குளக்கரை சாலையின் இருபுறங்களிலும், ஓட்டல் கழிவுகள், இறைச்சி கழிவுகள், கட்டட கழிவுகள் கொட்டி, குப்பை மேடாக மாற்றியுள்ளனர்.
துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார கேடும் ஏற்பட்டு வருகிறது. குப்பை கொட்டுவதை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
