/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூச்சிக்கொல்லி, உரம் தவிர்க்க வேண்டும்
/
பூச்சிக்கொல்லி, உரம் தவிர்க்க வேண்டும்
ADDED : செப் 12, 2025 08:33 PM
பொள்ளாச்சி, ; 'ரசாயன பூச்சிக்கொல்லிகள், உரம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்' என, தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
விவசாயத்தில் அதிகளவு ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் வேதியியல் உரங்களை பயன்படுத்துவதால், மண் வளம் பாதிக்கப்படுகிறது. விளைபொருட்களின் தரம் குறைகிறது.
தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சித்தார்த்தன் கூறியுள்ளதாவது: பாரம்பரிய காய்கறி, பழங்கள் விளைவிப்பதால், குறைந்தளவு ரசாயனம் பயன்படுத்த முடியும். குறைந்த செலவில் அதிக உற்பத்தி, நோய் தாக்குதலை கட்டுப்படுத்துதல், மண் வளத்தை காக்க முடியும்.
பசுமை உரம், பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், கோமியம், கழிவு உரம் ஆகியவற்றை பயன்படுத்தினால் பயிர்கள் ஆரோக்கியமாக வளரும். இது, சுற்றுச்சூழலுக்கும், உடல் நலனுக்கும் ஏற்றது. பூச்சிக்கொல்லிகளின் நச்சுத்தன்மைக்கான அடையாளங்களை கண்டு, அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு, கூறியுள்ளார்.