/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தக்காளியை தாக்கும் பூச்சி மற்றும் நோய்
/
தக்காளியை தாக்கும் பூச்சி மற்றும் நோய்
ADDED : அக் 13, 2024 10:13 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தில், தக்காளியை தாக்கும் நோய்கள் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தில், அதிக அளவு தக்காளி பயிரிடப்படுகிறது. செப்டம்பர் மாதத்தை விட, அக்டோபரில் தக்காளி விலை அதிகரித்துள்ளது. தக்காளி வரத்தும் அதிகமாக உள்ளது.
கிணத்துக்கடவு வட்டாரத்தில் சில இடங்களில் சாகுபடியாகும் தக்காளியில், பூச்சி தாக்குதல் மற்றும் பூஞ்சான நோய் தாக்குதல் காணப்படுகிறது. இதை தவிர்க்க, தமிழ்நாடு வேளாண் பல்கலை பேராசிரியர் ஆனந்தராஜா ஆலோசனை வழங்கியுள்ளார்.
அவர் கூறுகையில், 'பூச்சி தாக்குதல் மற்றும் பூஞ்சான நோயை கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் தண்ணீரில் ஸ்பின்னோசேட் என்ற மருந்தை, 0.3 மில்லி லிட்டர் மற்றும் ஸ்கோர் 1 மில்லி லிட்டர் என, இரண்டையும் கலந்து, காலை நேரத்தில் வெயிலுக்கு முன் தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், பூஞ்சானம் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்,' என்றார்.