ADDED : ஆக 24, 2026 09:13 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: நஞ்சுண்டாபுரம் ரோட்டில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
மனுவில், ‘அனைத்து கட்டணங்களையும் முறையாக செலுத்தி, ரசீதுகள், ஆவணங்கள் வைத்துள்ளோம். பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் பல ஆண்டுகளாக இப்பகுதியில் உள்ளோம். திராவிட ஆட்சிகளில் பலமுறை பட்டா கேட்டு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. மாநகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமிப்பு என கட்டடங்களை இடித்துவிட்டனர். விதிகளின்படி குடியிருப்புகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்’ எனக்கூறப்பட்டுள்ளது.
