தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தெருவிளக்கு வசதி தேவை  மனு கொடுத்து வலியுறுத்தல் 

தெருவிளக்கு வசதி தேவை  மனு கொடுத்து வலியுறுத்தல் 

தெருவிளக்கு வசதி தேவை  மனு கொடுத்து வலியுறுத்தல் 


ADDED : ஆக 31, 2026 06:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2026 06:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி  அருகே சமத்துாரில் தெருவிளக்கு வசதிகளை மேம்படுத்த வேண்டும், என, சப் – கலெக்டரிடம் மனு கொடுத்து பொதுமக்கள் வலியுறுத்தினர்.

பொள்ளாச்சி சப்–கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது.  சப்– கலெக்டர் ராமகிருஷ்ணசாமி தலைமை வகித்தார். அதில், சமத்துார் பேரூராட்சி துணை தலைவர் சக்திவேல் மற்றும் பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

சமத்துார் பேரூராட்சியில், 12 வார்டுகள் உள்ளன. வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் போதிய தெருவிளக்கு வசதியில்லாததால்  பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் விபத்துகள் ஏற்படுவதுடன், பாதுகாப்பு குறைபாடு உள்ளது.

எனவே,  மொத்தம் உள்ள, 12 வார்டுகளிலும் தேவையான இடங்களில், மின்கம்பங்களில் தெருவிளக்கு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us