/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எங்கள் பிரச்னைகளை தீர்க்கணும் குடியிருப்போர் நலச்சங்கம் மனு
/
எங்கள் பிரச்னைகளை தீர்க்கணும் குடியிருப்போர் நலச்சங்கம் மனு
எங்கள் பிரச்னைகளை தீர்க்கணும் குடியிருப்போர் நலச்சங்கம் மனு
எங்கள் பிரச்னைகளை தீர்க்கணும் குடியிருப்போர் நலச்சங்கம் மனு
ADDED : ஏப் 21, 2025 06:35 AM
கோவை : கோவை மதுக்கரை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்போர் நல சங்கம் சார்பில், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கோரி, கலெக்டரிடம் மனு கொக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, இ.கம்யூ., மதுக்கரை ஒன்றிய செயலாளர்- சக்திவேல் கூறியிருப்பதாவது:
மதுக்கரை தாலுகாவுக்கு உட்பட்ட வெள்ளலுார், மலுமிச்சம்பட்டி அன்பு நகர், சுகுணாபுரம் செந்தமிழ்நகர், அறிவொளி நகர் கோவைபுதுார் மற்றும் எம்.ஜி.ஆர்.,நகர் பகுதிகளில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிகளில் குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.
அப்பகுதியில் வாழும் மக்கள், மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இது குறித்து புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அதனால் தீர்வு காண கோரி, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.