/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மனு
/
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மனு
ADDED : நவ 14, 2025 09:25 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார கல்வி அலுவலர்களிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், வட்டார கல்வி அலுவலர்கள் எடிசன் பெர்னாட் மற்றும் பூம்பாவை ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மனுவில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஆசிரியர்கள் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்பட்டது. இதற்கான ஊதியம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமல் இருப்பதை உடனடியாக வழங்க வேண்டும்.
உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டுள்ளது.

