/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க மனு
/
கோவில் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க மனு
ADDED : ஜன 06, 2024 12:50 AM
கோவை;கோவிலில் அன்னதானம் வழங்கும் போது, பக்தர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட கோவில் பெண் பணியாளர் மீது, கடும் நடவடிக்கை மேற்கொள்ள கோவை பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.
பா.ஜ.,கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கரட்டுமேட்டிலுள்ள அருள்மிகு ரத்தினகிரி மருதாசல கடவுள் திருக்கோவிலில் அன்னதானம் வழங்கும் போது, பக்தர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட அறநிலையத்துறை பெண் பணியாளர் பாக்கியலட்சுமியின் செயல் கண்டிக்கத்தக்கது.
பக்தர்களிடம் தரம் தாழ்ந்து பேசுவது தவறு என்பதை, அறநிலையத்துறை பணியாளர்களுக்கு புரியவைக்க வேண்டும். அதற்கேற்ப அவர் மீது, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என கூறியுள்ளார்.